Back

நமது வரலாற்றைத் தேடி – ஆய்வுக் கட்டுரைப் போட்டி

0.00

நமது வரலாற்றைத் தேடி

(கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி – எழுதும் தொடர்ச்சியின் ஒரு பகுதி)

இளைஞர்களின் துடிப்பான திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் – நாங்கள் இந்த கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளோம். வெற்றியாளருக்கு ரூ. 5,000 பரிசுத் தொகை வழங்கப்படும்.

Note: REGISTRATION IS FREE

15-07-2025 பதிவு செய்வதற்கு கடைசி தேதி. 15-08-2025-ற்குள் ஆராய்ச்சிக் கட்டுரையை அனுப்ப வேண்டும்.

காஜுலு லட்சுமிநரசு செட்டி பற்றிய புத்தகம் தேவைப்படுவோர் ரூ. 150/-  செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.   (தமிழ் புத்தகம் மற்றும் அஞ்சல் செலவு உட்பட)

Category:
Description

Description

பி. ஜெகன்னாத் எழுதிய “மெட்ராஸின் முதல் பூர்வீகக் குரல் – காஜுலு லட்சுமிநரசு செட்டி” என்ற புத்தகத்தை கடந்த ஜூன் 2024-ல் வெளியிட்டோம். காஜுலு லட்சுமிநரசு செட்டி, வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு தனித்துவமான சுதந்திர போராட்ட வீரர். இந்த தேசத்திற்காக அவர் செய்த தியாகங்களையும், பிரிட்டிஷாரின் சித்திரவதைக்கு’ எதிராக போராடியதையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பச்சையப்பன் கல்லூரியின் ஒவ்வொரு சுவரும் கல்வியில் சமத்துவம் வேண்டும் என்ற அவரது ஆதங்கத்தைப் பறைசாற்றுகிறது. ‘தி இந்து’ அச்சகம் பத்திரிகை சுதந்திரம் குறித்த அவரது படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது. ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராக நியாயமான வரிவிதிப்புக்காக அவர் கர்ஜித்தார். பல ஆயிரம்  பூர்வீக மக்கள் தங்கள் மத உரிமைகளுக்காக அவரைப் பின்பற்றிப் போராடினர். சென்னையில் ஒடுக்கப்பட்ட பூர்வீக இந்தியர்களுக்காக ஒரு ‘அரசியல் அமைப்பை நிறுவினார்.

போட்டியில் பங்கேற்க தகுதி:

“நமது வரலாற்றைத் தேடி” என்ற தலைப்புள்ள போட்டிக்கு விருப்பமுள்ள அனைவரையும் இணையுமாறு அழைக்கின்றோம். இந்த போட்டியில் அதிகமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்க எதிர்பார்க்கப்படுகிறது.

காஜுலு லட்சுமிநரசு செட்டி தொடர்பான போட்டித் தலைப்புகள்

  1. கல்வியில் சமத்துவம்
  2. ஆங்கிலேயரின் சித்திரவதைக்கு எதிரான போராட்டம்
  3. நியாயமான வரிவிதிப்பு
  4. பத்திரிகை சுதந்திரம்
  5. பூர்வீக அரசியல் அமைப்பு
  6. நமது மத உரிமைகள்
  7. ஏழைக்கும், எளியவர்களுக்கும் தன்னலமின்றி உழைத்தல்
  8. சமூகம் மற்றும் நிர்வாக தொடர்பு மூலம் ஏற்படுத்தியதீர்வுகள்

கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி பரிசுத் தொகை விவரம்

ரூ.5,000 (முதல் பரிசு )

ரூ.3,000 (இரண்டாம் பரிசு )

ரூ.2,000 (மூன்றாம் பரிசு )

கட்டுரை போட்டிக்கான விதிமுறைகள்:

  • தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேற்கப் படுகின்றன.
  • ஆராய்ச்சிக் கட்டுரை – ஆவண ஆதாரங்கள் மற்றும் குறிப்பு விவரங்களுடன் இருக்க வேண்டும்.
  • கல்லூரி மாணவர்கள் யார் வேண்டுமானாலும் ஏதாவது ஒரு தலைப்பில் பங்கேற்கலாம்.
  • சொந்தமான ஆராய்ச்சிக் கட்டுரையாக உங்கள் கட்டுரை இருத்தல் அவசியம்.
  • ஆய்வின் சுருக்கம், முக்கிய சொற்கள், அறிமுகம், முடிவுரை, பயன்படுத்தப்பட்ட புத்தகங்களின் பட்டியல் ஆகியவற்றை இணைத்து கட்டுரையை அனுப்பவும்.
  • அதிகபட்சம் 3000 வார்த்தைகள் இருத்தல் வேண்டும்,
  • தட்டச்சு செய்யப்பட்ட பிரதிகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும், தமிழ் யுனிகோட் அல்லது Arial எழுத்துரு, எழுத்துரு அளவு 12, 1.5 வரி இடைவெளி
  • Word / Pdf வடிவத்தில் மட்டுமே அனுப்பவும்.
  • நடுவர் மன்ற குழுவின் முடிவே இறுதியானது.
  • வெற்றி பெறும் கட்டுரைகள் எங்களது இணையதளத்தில் வெளியிடப்படும்.

பேச்சுப் போட்டிக்கான விதிமுறைகள்:

  • பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் வரவேற்கப்படுகின்றன
  • பேச்சு பதிவுகளை வீடியோ வடிவத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் அனுப்பும் பதிவில் { உங்கள் பெயர்_கல்வி நிறுவனம்} என பெயரிடப்பட வேண்டும்
  • ஒவ்வொரு பங்கேற்பாளரும் அவருடய ஒரு பதிவை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்
  • வீடியோவின் கால அளவு 3-4 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்

பதிவு மற்றும் சமர்ப்பிப்பு விவரங்கள்:

www.themadrasnativeassociation.org என்ற முகவரியில் பதிவு செய்து பணம் செலுத்த கடைசி நாள் 15 /07/2025.

அச்சடிக்கப்பட்ட புத்தகம் தேவைப்படுவோர் ரூ.150 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.  (தமிழ் புத்தகம் அஞ்சல் கட்டணத்துடன் சேர்த்து உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்)

research.madras@gmail.com என்ற மின்னஞ்சலில் உங்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரையை 15/08/25-க்கு முன் அனுப்ப வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு:

தென்னிந்திய ஆய்வு மையம்

தொலைபேசி: 044-3148 4329, 6381683209 (வாட்ஸ்அப் மட்டும்)