Discover Our History – Research Article Competition on Gazulu Lakshminarasu Chetty (Copy)

250.00

‘நமது சொந்த வரலாற்றைத் தேடி’

(ஆய்வுக் கட்டுரைப் போட்டி – வரலாற்றை திருத்தி எழுதும் தொடர்ச்சியின் ஒரு பகுதி)

சுதந்திரப் போராட்ட வீரர் காஜுலு லட்சுமிநரசு செட்டி பற்றிய ஆய்வுக் கட்டுரைப் போட்டியை  தென்னிந்திய ஆய்வு மையம்  நடத்துகிறது.

பி. ஜெகன்னாத் எழுதிய “மெட்ராஸின் முதல் பூர்வீகக் குரல் – காஜுலு லட்சுமிநரசு செட்டி” என்ற புத்தகத்தை எங்கள் அமைப்பு கடந்த ஜூன் 2024-ல் வெளியிட்டோம்.

இருப்பினும், இளைஞர்களின் துடிப்பான திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் – நாங்கள் இந்த ஆய்வு கட்டுரைப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளோம். வெற்றியாளருக்கு ரூ. 10,000 பரிசுத் தொகை வழங்கப்படும்.

10-05-2025 பதிவு செய்வதற்கு கடைசி தேதி. 15-06-2025-ற்குள் ஆராய்ச்சிக் கட்டுரையை அனுப்ப வேண்டும். பதிவு கட்டணம் ரூ. 250/- மட்டும். (தமிழ் புத்தகம் மற்றும் அடிக்குறிப்புகள் உட்பட)

Category:
Description

Description

காஜுலு லட்சுமிநரசு செட்டி, வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு தனித்துவமான சுதந்திர போராட்ட வீரர். இந்த தேசத்திற்காக அவர் செய்த தியாகங்களையும், ‘பிரிட்டிஷாரின் சித்திரவதைக்கு’ எதிராக போராடியதையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பச்சையப்பன் கல்லூரியின் ஒவ்வொரு சுவரும் ‘கல்வியில் சமத்துவம்’ வேண்டும் என்ற அவரது ஆதங்கத்தைப் பறைசாற்றுகிறது. ‘தி இந்து’ அச்சகம் ‘பத்திரிகை சுதந்திரம்’ குறித்த அவரது படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது. ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராக ‘நியாயமான வரி’விதிப்புக்காக அவர் கர்ஜித்தார். பல ஆயிரம்  பூர்வீக மக்கள் தங்கள் ‘மத உரிமை’களுக்காக அவரைப் பின்பற்றிப் போராடினர். சென்னையில் ஒடுக்கப்பட்ட பூர்வீக இந்தியர்களுக்காக ஒரு ‘அரசியல் அமைப்பை’ நிறுவினார்.

 

போட்டியில் பங்கேற்க தகுதி:

“நமது சொந்த வரலாற்றைத் தேடி – வரலாற்றை திருத்தி எழுதுதல்” என்ற தலைப்புள்ள போட்டிக்கு விருப்பமுள்ள அனைவரையும் எங்களுடன் இணையுமாறு அழைக்கின்றோம். இந்த வரலாற்று போட்டியில் பங்கேற்க கல்லூரி மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

காஜுலு லட்சுமிநரசு செட்டி தொடர்பான ஆராய்ச்சி தலைப்புகள்

  1. கல்வியில் சமத்துவம்
  2. ஆங்கிலேயரின் சித்திரவதைக்கு எதிரான போராட்டம்
  3. நியாயமான வரிவிதிப்பு
  4. பத்திரிகை சுதந்திரம்
  5. பூர்வீக அரசியல் அமைப்பு
  6. நமது மத உரிமைகள்
  7. ஏழைக்கும், எளியவர்களுக்கும் தன்னலமின்றி உழைத்தல்
  8. சமூகம் மற்றும் நிர்வாகத்தின் மூலம் ஏற்படுத்திய தீர்வுகள்

பரிசுத் தொகை விவரம்

ரூ.10,000 (முதல் வெற்றியாளர்)

ரூ.6000 (இரண்டாம் வெற்றியாளர்)

ரூ.4000 (மூன்றாம் வெற்றியாளர்)

பங்கேற்பாளர்களுக்கு பதிப்புரிமை பெற்ற புத்தகம் மற்றும் ஆராய்ச்சிக்கான ஆவணங்கள் கொடுக்கப்படும்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

  • தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேற்கப் படுகின்றன.
  • ஆராய்ச்சிக் கட்டுரை – ஆவண ஆதாரங்கள் மற்றும் குறிப்பு விவரங்களுடன் இருக்க வேண்டும்.
  • கல்லூரி மாணவர்கள் யார் வேண்டுமானாலும் ஏதாவது ஒரு தலைப்பில் பங்கேற்கலாம்.
  • சொந்தமான ஆராய்ச்சிக் கட்டுரையாக இருத்தல் வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட ஆராய்ச்சி முறையில் உங்கள் ஆராய்ச்சி கட்டுரை இருத்தல் அவசியம்.
  • ஆய்வின் சுருக்கம், முக்கிய சொற்கள், அறிமுகம், முடிவுரை, பயன்படுத்தப்பட்ட புத்தகங்களின் பட்டியல் ஆகியவற்றை இணைத்து கட்டுரையை அனுப்பவும்.
  • அதிகபட்சம் 3000 வார்த்தைகள் இருத்தல் வேண்டும்,
  • தட்டச்சு செய்யப்பட்ட பிரதிகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும், தமிழ் யுனிகோட் அல்லது Arial எழுத்துரு, எழுத்துரு அளவு 12, 1.5 வரி இடைவெளி
  • வேர்ட் / pdf வடிவத்தில் மட்டுமே அனுப்பவும்.
  • நடுவர் மன்ற குழுவின் முடிவே இறுதியானது.
  • வெற்றி பெறும் கட்டுரைகள் எங்களது இணையதளத்தில் வெளியிடப்படும்.

 

பதிவு மற்றும் சமர்ப்பிப்பு விவரங்கள்:

www.themadrasnativeassociation.org என்ற முகவரியில் பதிவு செய்து பணம் செலுத்த கடைசி நாள் 10/05/2025.

(பதிவுக் கட்டணம் – ரூ.250 (அச்சடிக்கப்பட்ட புத்தகம் (ஆங்கிலம் / தமிழ்) அஞ்சல் கட்டணத்துடன் சேர்த்து உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும். ஆராய்ச்சிக்கான ஆவணங்கள் மின்னஞ்சலில் அனுப்பப்படும்)

research.madras@gmail.com என்ற மின்னஞ்சலில் உங்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரையை 15/06/25-க்கு முன் அனுப்ப வேண்டும்.

 

மேலும் தகவல்களுக்கு:

தென்னிந்திய ஆய்வு மையம்

தொலைபேசி: 044-3148 4329, 6381683209 (வாட்ஸ்அப் மட்டும்)

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “Discover Our History – Research Article Competition on Gazulu Lakshminarasu Chetty (Copy)”

Your email address will not be published. Required fields are marked *

Shipping & Delivery

Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames.Consequat net

Vestibulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames.Consequat netus.

Scelerisque adipiscing bibendum sem vestibulum et in a a a purus lectus faucibus lobortis tincidunt purus lectus nisl class eros.Condimentum a et ullamcorper dictumst mus et tristique elementum nam inceptos hac vestibulum amet elit